1. Home
  2. தமிழ்நாடு

டிகிரி முடித்தவரா நீங்கள்? மத்திய அரசின் வேலை காத்துக்கிட்டிருக்கு..!

1

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் குரூப்-சி பிரிவில் கீழ் உதவி மத்திய புலனாய்வு அதிகாரி கிரேடு-II பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான சிறிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ள நிலையில், ஆன்லைன் வழியாக விண்ணப்பம் தொடங்குகிறது.

காலிப்பணியிடங்கள் விவரம்

பிரிவு பணியிடங்கள்
பொதுப் பிரிவு 1,537
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் 442
ஒபிசி 946
எஸ்சி 566
எஸ்டி 226
மொத்தம் 3,717

வயது வரம்பு

  • உதவி மத்திய புலனாய்வு அதிகாரியாக பதவியில் சேர 10.08.2025 தேதியின்படி, 18 வயது முதல் 27 வயது வரை இருக்கலாம். இதில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள், மத்திய அரசு பணியாளர்களுக்கு 40 வயது வரை தகுதி உள்ளது.
  • வயது வரம்பு தளர்வுபடி, பொதுப் பிரிவினர் 35 வயது வரையும், ஒபிசி பிரிவினர் 38 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 40 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி
புலனாய்வு துறை பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் கணினி திறன் அவசியம்.

சம்பள விவரம்
இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் அதிகாரிகளுக்கு நிலை 7 கீழ் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை
உதவி மத்திய புலனாய்வு அதிகாரி பதவிக்கான ஆட்களை தேர்வு செய்ய இரண்டு கட்ட தேர்வு முறை மற்றும் நேர்காணல் நடைபெறும். முதல் கட்ட தேர்வு தகுதித் தேர்வாகும். 100 மதிப்பெண்களுக்கு 1 மணி நேரம் நடைபெறும். இதில் நெகட்டிங் மதிப்பெண்கள் உள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இரண்டாம் கட்ட தேர்விற்கு தகுதி பெறுவார்கள்.

இரண்டாம் கட்ட தேர்வு 50 மதிப்பெண்களுக்கு விரிவாக எழுதும் வகையில் நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 100 மதிப்பெண்களுக்கு நேர்காணல் நடத்தப்படும். இதிலும் தேர்ச்சி பெறும் நபர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பணி நியமனம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.mha.gov.in/en என்ற இணையதளத்தில் வரும் ஜூலை 19 முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம். தொடர்ந்து, ஆகஸ்ட் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கான முழுமையான அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வு முறை, பாடத்திட்டம் ஆகிய விவரங்கள் அறிவிப்பில் இடம்பெற்று இருக்கும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.550 மற்றும் தேர்வு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். இதில் எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் தேர்வு கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டியது இல்லை.

முக்கிய நாட்கள்

விவரம் தேதிகள்
விண்ணப்பிக்க கடைசி நாள் 10.08.2025

பட்டப்படிப்பு முடித்து அரசு வேலையை எதிர்பார்த்து காத்துகொண்டு இருப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ளலாம். குறிப்பாக மாநில அளவில் போட்டித்தேர்வுகள் எழுதுகின்றவர்கள் இந்த வாய்ப்பை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளலாம். காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையும் அதிகளவில் உள்ள நிலையில், இந்த ஆண்டின் சிறந்த வாய்ப்பாக அமைகிறது.

Trending News

Latest News

You May Like