1. Home
  2. தமிழ்நாடு

தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றப்பட்டுள்ளதா..? ஐஆர்சிடிசி விளக்கம்..!

1

ரயிலில் வசதியாக மேற்கொள்ள டிக்கெட் முன்பதிவு செய்யும் நிலையில் அவசர தேவைகளுக்காகவும், திடீரென பயணம் மேற்கொள்வதற்கும் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு தட்கல் நடைமுறை உள்ளது. ரயிலில் பயணம் செய்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக தட்கலில் டிக்கெட் போட வேண்டும். அதாவது ஒருநாள் முன்னதாக டிக்கெட் புக்கிங் செய்வார்கள்.


இந்நிலையில் ஏ.சி. பெட்டிகளில் பயணம் செய்ய வேண்டும் என்றால் காலை 10 மணிக்கு தட்கல் டிக்கெட் முன்பதிவு துவங்கம். காலை 11 மணிக்கு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஆரம்பிக்கும். தட்கலில் பிரீமியர் தக்கல் என மற்றொரு வசதியும் உள்ளது. பிரீமியர் தக்கலில் முன்பதிவு செய்யும் போது டிக்கெட் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. இந்த இரண்டு தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கான நேரம் ஒன்று தான்.


இந்நிலையில் தட்கல் மற்றும் பிரிமியர் தட்கலுக்கான முன்பதிவு நேரம் மாற்றப்பட்டு இருப்பதாக சோஷியல் மீடியாவில் தீயாய் தகவல்கள் பரவி வருகின்றன. இதுக்குறித்து ஐஆர்சிடிசி தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, தட்கல் மற்றும் ப்ரீமியம் தட்கல் டிக்கெட் முன்பதிவுகளுக்கான நேரங்கள் வெவ்வேறாக மாற்றப்பட்டுள்ளதாக சில தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.


குளிர்சாதன வசதி மற்றும் சாதாரண வகுப்புகளுக்கான தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் டிக்கெட் முன்பதிவுகளுக்கான நேரங்களில் எத்தகைய மாற்றமும் இல்லை. முகவர்களுக்கு அனுபதிக்கப்பட்ட முன்பதிவு நேரங்களும் மாற்றப்படவில்லை என ஐஆர்சிடிசி விளக்கம் அளித்துள்ளது. இதன் மூலமாக தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் டிக்கெட் முன்பதிவுகளுக்கான நேரம் மாற்றப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

Trending News

Latest News

You May Like