பரபரப்பு..!தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 ரவுடிகள் படுகொலை..!

புதுச்சேரியை சேர்ந்த ஐயப்பன்(48) திருவண்ணாமலையில் தலைமறைவாகி இருந்த நிலையில், நேற்று (மார்ச்.10) வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று (மார்ச்.11) காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி வசூல்ராஜா வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். மேலும், தஞ்சையை சேர்ந்த பிரபல ரவுடி குருந்தையன் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சமீபகாலமாக ரவுடிகள் படுகொலை செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ரவுடிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.