தேசிய தலைமை அறிவிப்பு : தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவரானார் ஹசீனா சையத்..!

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக ஹசீனா சையத் நியமனத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஒப்புதலுடன், இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதில், மயிலாடுதுறை தொகுதியில் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக இருந்த ஆர்.சுதா போட்டியிட்டார். ஆர்.சுதா தேர்தலில் போட்டியிட்டதன் காரணமாக, தற்போது தமிழ்நாட்டில் மகிளா காங்கிரஸ் புதிய தலைவராக ஹசீனா சையத் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.