3 ஆண்டுகளில் ஆயிரம் ரூபாய் தவிர வேற ஏதாவது அரசு செய்தது உண்டா?
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: எங்களுடன் கூட்டணி வைப்பது குறித்து தம்பி விஜய் தான் முடிவெடுக்க வேண்டும். செப்டம்பர் மாதம் விஜய் கட்சி பணியை துவங்குகிறார். வேளாண்மை அரசு பணி என நான் சொன்னால் சிரிக்கின்றனர். வேளாண்மை குறித்து பில்கேட்ஸ் பேசினால் பேசும் பொருள் ஆகுகிறது.
தி.மு.க.,வை யார் எதிர்த்தாலும் அவர்களை சங்கி என்று கூறுகின்றனர். உண்மையில், பா.ஜ.,வின் ‘பி’ டீம் தி.மு.க., தான் பட்ஜெட்டில் தமிழத்தின் பெயர் இல்லை; நிதி ஒதுக்கவில்லை எனக் கூறி முதல்வர் ஸ்டாலின் நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் எதிர்ப்பு தெரிவித்தார். அப்பா பெயரில், 100 ரூபாய் காசு வெளியிட்டதும் கை குலுக்கிக் கொண்டாடுகின்றனர். அவ்வளவு தானா உங்க கோபம்? 100 ரூபாய் செல்லாக்காசுக்கு சரண் அடைந்து விட்டீர்கள்.
அண்ணா பல்கலையில் நடந்த முறைகேட்டை, அறப்போர் இயக்கம் வெளிக்கொண்டு வரவிட்டால் யாருக்காது தெரிந்து இருக்குமா? கடந்த 3 ஆண்டுகளில் ஆயிரம் ரூபாய் தவிர வேற ஏதாவது அரசு செய்தது உண்டா? திருச்சி எஸ்.பி., வருண்குமார் மீதான அவதூறு கருத்துக்கும், எனக்கும் தொடர்பில்லை. சமூக வலைதளத்தில் ஆபாசமாக எழுதியவர்களை கட்சியில் இருந்து நீக்கியுள்ளேன்.
என்னையும், என் குடும்பத்தாரையும், என் கட்சி பெண்களையும் தொடர்ந்து இழிவுபடுத்தி வருகின்றனர். எனது குடும்பத்தை பற்றி சமூகவலைதளத்தில் ஆபாசமாக எழுதியதை எல்லாம் நான் கடந்து செல்கிறேன். வருண் குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தான் இந்த வேலையை செய்கிறார்கள் என்று சொல்லலாமா? இவ்வாறு சீமான் கூறினார்.