1. Home
  2. தமிழ்நாடு

திமுக எங்காவது ஒரு இடத்தில் உண்மையை பேசி இருக்கிறார்களா? மக்களை ஏமாற்றியே காலத்தை ஓட்டிவிட்டார்கள் - சீமான்!

Q

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி ஒரு பக்கமும், மாலையில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுக்கூட்டம் வாயிலாகவும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சீமான் நேற்று பேசியதாவது:-
இந்த இடைத்தேர்தலில் வாக்கினை உதயசூரியனுக்கு போட்டதை படமாக கொண்டு வந்து கொடுத்தால் தான் பணம் கொடுப்பேன் என்று கூறி இருக்கிறார்கள். ஏனென்றால் பணம் வாங்கி கொண்டு நாம் தமிழர் கட்சிக்கு தான் நிச்சயம் மக்கள் வாக்களிப்பார்கள். ஆட்சியில் இருப்பவர்கள் செய்த நன்மைகள் மக்களுக்கு நன்றாக தெரியும். காமராசர் சாலைகள், ஆணைகள், பள்ளிக்கூடங்களை கட்டினார். மக்களுக்கு இன்று வரை காமராசரின் சாதனைகள் நினைவில் இருக்கிறது. ஆனால் இன்று திராவிட மாடல் ஆட்சி நல்லாட்சி என்பதை யாரும் சொல்வதில்லை. அதையும் திமுகவினரே சொல்லி கொள்கின்றனர். முதலமைச்சர் வருகிறார் என்றால் ஒரு வாரத்திற்கு முன்பாகவே மக்களுக்கு பணம் கொடுத்து அழைத்து வருகிறார்கள். நல்லாட்சி கொடுத்திருந்தால், மக்கள் வீதிக்கு வந்து வரவேற்பார்கள்.
நான் யாரு.. எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், தம்பி விஜய் போலவா.. நான் சாதாரண ஒரு விவசாயி மகன். ஒரு ரூபாய் பணம் கொடுக்காமல் இவ்வளவு மக்கள் வந்திருக்கிறார்கள். நம் வலியை, மக்களின் வேதனையை அவர்களின் மொழியில் பேசுவான் என்று இங்கே இவ்வளவு பேர் கூடி இருக்கிறார்கள். எனக்கானவன் என்ற நம்பிக்கையில் மக்கள் வந்து எனக்காக நிற்கிறார்கள். திமுக எங்காவது ஒரு இடத்தில் உண்மையை பேசி இருக்கிறார்களா? மக்களை ஏமாற்றியே காலத்தை ஓட்டிவிட்டார்கள். நான் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் அளிக்க முடியவில்லை. பெரியார் யார் தெரியுமா என்று மட்டுமே பதில் கேள்வி கேட்கிறார்களே தவிர, யாரும் பதில் சொல்வதில்லை. அவர் ஒரு ஊசி போன வெங்காயம். பெரியார் பேசியதையும், எழுதியதையும் படித்துவிட்டு தான் நான் பேசுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like