5 ஆண்டுகளில் மோடி இத்தனை நாடுகள் சென்றுள்ளாரா? செலவு இத்தனை கோடியா?

5 ஆண்டுகளில் மோடி இத்தனை நாடுகள் சென்றுள்ளாரா? செலவு இத்தனை கோடியா?

5 ஆண்டுகளில் மோடி இத்தனை நாடுகள் சென்றுள்ளாரா? செலவு இத்தனை கோடியா?
X

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் 58 வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் வி.முரளிதரன் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், 2015 முதல், பிரதமர் 58 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பயணங்களின்போது இந்தியா கையெழுத்திட்ட ஒப்பந்தங்களின் விவரங்களையும் அமைச்சர் பட்டியலிட்டு உள்ளார். 58 வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள ரூ. 517.82 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயணங்களால் வர்த்தகம் மற்றும் முதலீடு, தொழில்நுட்பம், கடல்சார், விண்வெளி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெளிநாட்டு நாடுகளுடன் இந்தியா உறவை பலப்படுத்தியுள்ளதாக பதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it