ஹரியானாவில் பெண்களுக்கு மாதம் ரூ.2,100 நிதி வழங்குவோம்..!
ஹரியானா சட்டசபைக்கு அக்., 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் ஆட்சியை மீண்டும் பிடித்து விட வேண்டும் என பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது. சட்டசபை தேர்தலுக்கான வாக்குறுதியை மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், பா.ஜ., தலைவருமான நட்டா வெளியிட்டார்.
* ஹரியானாவில் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.2100 உதவித்தொகை வழங்கப்படும்.
* அந்தியோதயா திட்டத்தின் கீழ் சிலிண்டர் ஒன்றுக்கு தலா ரூ.500 உதவித்தொகை வழங்கப்படும்.
* தெற்கு ஹரியானாவில் சர்வதேச அளவிலான ஆரவல்லி வன சபாரி பூங்கா அமைக்கப்படும்.
* தொழிற்கல்வி படிக்கும் பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
* ஹரியானாவில் வசிக்கும் அக்னி வீரர்களுக்கு கட்டாயம் அரசு வேலை வழங்கப்படும்.
* காங்கிரஸ் பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் அறிவித்த நிலையில் பா.ஜ., ரூ.2,100 என அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.