1. Home
  2. தமிழ்நாடு

ஹர்ஷித் ராணாவுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை ..!

1

ஹர்ஷித் ராணாவுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: ஐபிஎல் நடத்தை விதிமுறையில் படிநிலை ஒன்றின் கீழ் விதி 2.5-ஐ ராணா மீறியுள்ளார். அவர் தனது விதிமீறலை ஒப்புக் கொண்டு அதற்கான அபாராதத் தொகையை கட்ட சம்மதித்துள்ளார். படிநிலை ஒன்றில் வீரர் ஒருவர் விதிமீறலில் ஈடுபட்டால், நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான போட்டியில் மயங்க் அகர்வாலை ஆட்டமிழக்கச் செய்தபோதும், இதே விதிமீறலில் ஈடுபட்ட ராணாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வருகிற மே 3 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக நடைபெறும் போட்டியில் விளையாட ஹர்ஷித் ராணாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நிர்வாகத்தின் இந்த முடிவு கொல்கத்தா அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like