1. Home
  2. தமிழ்நாடு

பிரபல ஹாரி பாட்டர் நடிகர் ஃபிஷெர் பெக்கர் காலமானார்..!

Q

ஹாரி பாட்டர் அண்ட் தி சோர்சரர்ஸ் ஸ்டோன் மற்றும் டாக்டர் ஹூ ஆகிய படங்களில் நடித்து மிகவும் புகழ்பெற்று தனக்கென தனி இடத்தை உருவாக்கிய பிரிட்டிஷ் நடிகர் சைமன் ஃபிஷெர் பெக்கர். இவர் உடல்நலக்குறைவால் காலமான செய்தியை அவரது மேலாளர் ஜாஃப்ரி மேனேஜ்மென்ட்டின் கிம் பாரி உறுதிப்படுத்தினார்.

Doctor who' டிவி சீரிஸில் Dorium Maldova கதாபாத்திரத்தின் மூலம் இந்திய ரசிகர்கள் இடையே இவர் மிகவும் பிரபலம். மேலும், பல படங்களில் தனது சிறந்த நடிப்பால் சில விருதுகளையும் வென்றுள்ளார்.

ஹாரி பாட்டர் அண்ட் தி சோர்சரர்ஸ் ஸ்டோன் படத்தில் ஹஃபிள்பஃப் வீட்டில் பேயான ஃபேட் ஃப்ரியராக ஃபிஷர்-பெக்கர் ரசிகர்களில் இதயங்களை வென்றிருந்தார்.

அதுமட்டுமின்றி இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான அவரது ஆஸ்கர் விருது பெற்ற லெஸ் மிசரபிள்ஸ் திரைப்படத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவரது மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like