கஷ்டப்பட்டு வெளிநாடுகளில் சம்பாதித்த பணம்! 111 சவரன் நகை கொள்ளை!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆலம்பாடியில் அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து 111 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆலம்பாடியில் அடுத்தடுத்து உள்ள மணி, ராம்குமார் ஆகியோரின் வீடுகளில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இருவரும் வெளிநாடு சென்று வேலை செய்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
ராம்குமார் வீட்டில் 74 சவரன் நகை, ரூ. 6 லட்சம் ரொக்கம், மணி வீட்டில் 37 சவரன் நகை, ரூ .1.25 லட்சம் ரொக்கத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். வீட்டில் பீரோவை உடைக்க முடியாததால் அதனை வயல்வெளிக்கு எடுத்துச் சென்ற கொள்ளையர்கள் அங்கு வைத்து உடைத்து கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.