வீட்டு பணிப்பெண் ஆடையைக் கழட்டி துன்புறுத்தல்.. இளம்பெண் நடத்திய அட்டூழியம் !!

வீட்டில் வேலைக்காக அமர்த்தப்பட்ட மைனர் பெண்ணை, தாக்கி, ஆடையை கழற்றிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகர்பகுதியில் உள்ள குடியிருப்பில் 25 வயது இளம்பெண் ஒருவர் தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகிறார். அப்பெண் தான் ஒரு போராடும் நடிகை என்றும் மாடல் அழகி என்றும் கூறிக்கொண்டு வலம் வருகிறார். இந்த நிலையில், அவரது வீட்டில் கடந்த நான்கு மாதங்களாக மைனர் பெண் வீட்டு வேலை செய்து வருகிறார். நடிகை எனக்கூறிக்கொள்ளும் இளம்பெண், சிறுமிக்கு செய்யும் கொடுமைகள் வெளியேவந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் மைனர் பெண் சரியாக வேலை செய்யவில்லை என்று கூறி பலமுறை தாக்கியுள்ளார். மைனர் பெண் ஆரம்பத்தில் அனுபவித்த சித்திரவதைக்கு எதிராக புகார் செய்யவில்லை. இந்த நிலையில், கடந்த வாரம் சரியான நேரத்தில் வேலையை முடிக்கத் தவறியதாக மீண்டும் மைனர் பெண்ணை சித்திரவதை செய்துள்ளார்.
வேலை முடிவதில் தாமதம் ஏற்பட்டதால், மைனர் பெண்ணை தாக்கியதோடு, ஆடைகளை கழற்றுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். அதன்பிறகு, சிறுமியை நிர்வாணமாக புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் தாக்கியதில் சிறுமிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றார்.
மருத்துவமனையில் சந்தித்த சகோதரி காயம் குறித்து விசாரித்தபோது, அவர் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார். இதையடுத்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் இந்த கொடூமை வெளியேவந்துள்ளது. புகாரை பெற்ற போலீசார் இளம்பெண்ணை கைது செய்தனர்.
newstm.in