ஆன்லைன் சூதாட்டத்தால் தொல்லை.. சூபர்வைசர் தற்கொலை.. கர்ப்பிணி மனைவி தவிப்பு !

ஆன்லைன் சூதாட்டத்தால் தொல்லை.. சூபர்வைசர் தற்கொலை.. கர்ப்பிணி மனைவி தவிப்பு !

ஆன்லைன் சூதாட்டத்தால் தொல்லை.. சூபர்வைசர் தற்கொலை.. கர்ப்பிணி மனைவி தவிப்பு !
X

சென்னை செங்குன்றம் பகுதியில் உள்ள அண்ணா தெருவில் தினேஷ்(27) - சரண்யா (25) தம்பதியர் வசித்து வந்தனர். இதில் தினேஷ் புழல் அடுத்த சூரப்பட்டில் உள்ள தனியார் குடோனில் சூபர்வைசராக பணியாற்றி வந்தார். 

தினேஷ்க்கு ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக ஈடுபாடு இந்ததாக கூறப்படுகிறது. ஆன்லைன் சூதாட்டத்தில் மூழ்கிய அவர் தொடக்கத்தில் லாபம் பெற்றாலும், அடுத்தடுத்து பெரும் தொகையை அவர் அதில் இழந்துள்ளார். இதனை சரிசெய்ய பலரிடம் கடன் வாங்கியும் உள்ளார். 

ஏற்கனவே பெரும் பணத்தை இழந்த மனகஷ்டத்தில் இருந்த அவரிடம் கடனை கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். ஆனால், தினேஷால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை. 

இதனால் அனஉளைச்சல் அடைந்த அவர் வீட்டில் தனியாக இருக்கும்போது மின் விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வீட்டிற்கு வந்த அவரது மனைவி சரண்யா, கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்.

அங்கு விரைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்ணடு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். எனினும் அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். 

இதுகுறித்து, தகவலறிந்த செங்குன்றம் போலீசார் சடலத்தை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

தற்கொலை செய்துக்கொண்ட தினேஷின் மனைவி சரண்யா தற்போது 4 மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in 

Next Story
Share it