100000 பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்து... சைலண்டாக காய் நகர்த்திய பாஜகவின் வினோஜ் பி செல்வம்..!
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் பெண்மையை கொண்டாடும் நாள். பெண்களின் பணிக்கு சிறப்புப் பாராட்டு தெரிவிக்கும் வகையில், பெண்களின் சாதனைகளை உலகம் முழுவதும் கொண்டாடும் வகையில் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.மகளிர் தினத்தின் நூற்றாண்டு விழா 2011இல் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு மகளிர் தினத்தின் 111 வது ஆண்டு ஆகும்.
இந்நிலையில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம் சுமார் 1 லட்சம் பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்து அட்டை சார்பில் வழங்கப்பட்டுள்ளது. வீட்டைக் கவனித்துக்கொள்வதோடு, அலுவலகப் பொறுப்புகளையும் சிறப்பாகச் செய்யும் பெண்ணை கவுரவிக்கும் விதமாக வினோஜ் பி செல்வம் செய்த செயல் கவனத்தை பெற்றுள்ளது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சி திட்டங்களில் ஒன்றான “பிரதம மந்திரி முத்ரா யோஜனா” திட்டத்தின் கீழ் நம் தமிழக பெண்கள் 2022-2023ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் ₹43,731 கோடி கடன் பெற்று முன்னேறியுள்ளனர் என்கிற செய்தி பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
“எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை”
என்ற மகாகவி பாரதி கண்ட புதுமைப் பெண்களாய் பாரத தேசத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் நம் அன்பு தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண்களுக்கு அதிகாரம் அளிப்போம், பாலின சமத்துவம் போற்றுவோம்! என்று தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அதில் ஒன்று பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டம்(PMMY). இந்த திட்டமானது சுய தொழிலை ஊக்குவிக்கும் பொறுட்டு 2015 ஆம் ஆண்டு மோடி தலைமையிலான அரசால் கொண்டு வரப்பட்டது.
பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் எந்தவித அடமானம் இல்லாமல் ரூ.10 லட்சம் வரை கடனாக பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்கள் மத்திய சென்னை தொகுதியின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் அனைவரின் கரங்களுக்கும் எனது மகளிர் தின வாழ்த்துகள் சென்று சேர வேண்டுமென விரும்பினேன். அதன் வெளிப்பாடாக இன்று முதலே அனைவரின் கரங்களிலும் எனது வாழ்த்துச் செய்தி சென்றுகொண்டு இருக்கிறது.
— Vinoj P Selvam (@VinojBJP) March 6, 2024
"எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்… pic.twitter.com/xMeN6aj8GS