தே.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க., இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது - பிரதமர் மோடி..!

பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக வலிமையாக ஒன்றுபடுவோம். தே.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க., இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தே.ஜ., கூட்டணி கட்சிகள் இணைந்து வளர்ச்சிப்பாதையில் தமிழகத்தை கொண்டு செல்வோம். மாநிலத்திற்கு விடா முயற்சியுடன் சேவை செய்வோம்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றும் ஒரு அரசை நாங்கள் உறுதி செய்வோம். தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும், தமிழ் கலாசாரத்தின் தனித்துவத்தை பாதுகாக்கவும், ஊழல் தி.மு.க.,வை விரைவில் வேரோடு அகற்றுவது முக்கியம். அதை தே.ஜ., கூட்டணி உறுதி செய்யும். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.