சூர்யா ரசிகர்கள் ஹாப்பி..!!கங்குவா சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!
சூர்யா நடித்திருக்கும் கங்குவாபேண்டஸி கலந்த ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி தவிர உலக அளவில் 38 மொழிகளில் படம் வெளியாக இருக்கிறது.
கடைசியாக சூர்யாவின் நடிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சூர்யாவை திரையில் காண ஆவலோடும் ஏக்கத்துடனும் காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்காக தற்போது கங்குவா திரைப்படம் வெளியாகவுள்ளது.
சூர்யாவின் திரைப்பயணத்திலேயே அதிக பொருட்ச்செலவில் தயாராகியிருக்கும் இப்படத்தை சிவா இயக்கியுள்ளார். படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ மற்றும் ட்ரைலர், பாடல்கள் ஆகியவை ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் இப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. எனவே படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பட்சத்தில் கண்டிப்பாக கங்குவா ஆயிரம் கோடி வசூலை அடிக்கும் என கணிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கங்குவா திரைப்படம் நாளை மறுநாள் திரையில் வெளியாகவுள்ளது. மற்ற மாநிலங்களில் கங்குவா படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி இல்லை. காலை 11 மணிக்கு தான் தமிழ்நாட்டில் முதல் காட்சிக்கு அனுமதி. இருப்பினும் கங்குவா படக்குழு சிறப்பு காட்சி கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தது.
இதைத்தொடர்ந்து தமிழக அரசு கங்குவா படத்திற்கு சிறப்பு காட்சிக்கான அனுமதியை வழங்கியுள்ளது. அதன்படி தமிழகத்தில் காலை 9 மணி முதல் கங்குவா காட்சிகள் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.