இந்தியாவுக்கு அமெரிக்கா குடியரசு தின வாழ்த்து..!

நாடு முழுவதும் 76வது குடியரசுத் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இந்தியாவுக்கு அமெரிக்கா சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய அரசியலமைப்பை அவர்கள் ஏற்றுக்கொண்டதை நினைவுகூரும் வேளையில், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதில் நாமும் அவர்களுடன் இணைகிறோம்.
இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே உறவுகள் புதிய உச்சம் தொட்டு வருகிறது. 21ம் நூற்றாண்டின் உறவு சிறப்பாக இருக்கும். பொருளாதார உறவு, விண்வெளி ஆராய்ச்சி உட்பட அனைத்து முயற்சிகளுக்கும் எங்கள் ஒத்துழைப்பை வழங்குவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.