சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. நாளைக்கு இருக்கு மழை.. !

சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. நாளைக்கு இருக்கு மழை.. !

சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. நாளைக்கு இருக்கு மழை.. !
X

சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் நாளை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து வருகிறது. அண்மையில் பரவலாக மழை பெய்தபோதும் பின்னர் நாட்களில் வெப்பம் அதிகரித்தது. 

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறுகையில், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் வெப்பச் சலனம் மற்றும் தென்மேற்கு பருவ காற்று காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார். 

அதேநேரத்தில் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் நாளை மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார். 

இதனிடையே, தமிழகத்தில் இன்று சேலம், புதுவை, மதுரை, திருச்சி, வேலூர், நாகை ஆகிய மாவட்டங்களில் இன்று வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அவர் கூறினார்.

newstm.in 

Next Story
Share it