1. Home
  2. தமிழ்நாடு

மேற்கு வங்க அட்டைதாரர்களுக்கு வந்த ஹாப்பி நியூஸ்..!

1

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரவுள்ள பண்டிகை காலத்தை முன்னிட்டு மேற்கு வங்காளத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அனைத்து உணவு பொருட்களுடன் சர்க்கரை மற்றும் கோதுமை மாவு மானிய விலையில் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் அக்டோபர் 17ம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 18ம் தேதி வரை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில உணவு மற்றும் வழங்கள் துறையின் அறிக்கையின்படி அந்தியோதயா அன்னயோஜனா சிறப்பு முன்னுரிமை அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ மாவு ரூபாய் 28க்கும், சர்க்கரை ஒரு கிலோ ரூபாய் 32 க்கும் வழங்கப்படும்.

இதைத் தவிர இந்த அட்டைதாரர்களுக்கு 21 கிலோ அரிசி இலவசமாகவும், ஒரு குடும்பத்திற்கு 13 கிலோ கோதுமை அல்லது கோதுமை மாவுடன், ஒரு கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்படும். அரசின் இந்த அறிவிப்பு ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like