கமல் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்..! தக் லைஃப் படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி..!

மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள 'தக் லைஃப்' படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
நீண்ட இடைவேளைக்கு கமல், மணிரத்னம் இருவரும் 'தக் லைஃப்' படத்தில் இணைந்தனர். இந்த காம்போ இணைந்ததே ரசிகர்கள் மட்டுமல்லாமல் கோலிவுட் வட்டாரத்திலும் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியது. இப்படத்தில் கமலுடன் சிம்பு முக்கியமான ரோலில் நடித்துள்ளார். மேலும் ஜோஜு ஜார்ஜ், திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்தநிலையில், தக் லைஃப் படத்திற்கு நாளை ஒரு நாள் மட்டும் கூடுதாலக ஒரு சிறப்பு காட்சிக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சென்னை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நாராயணன் தமிழக அரசின் உள்துறையிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்தநிலையில், தக் லைஃப் திரைப்படத்திற்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் நாளை ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சியினை திரையிட தமிழக அரசின் உள்துறை அனுமதியளித்து இன்று (ஜூன் 4) அரசாணை வெளியிட்டுள்ளது.
முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 2 மணி வரை மொத்தமாக ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.கன்னடம் தமிழில் இருந்து உருவானது என்று கமல்ஹாசன் பேசியதற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், கர்நாடகாவில் மட்டும் தக் லைஃப் படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.