1. Home
  2. தமிழ்நாடு

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்..! அக்கவுண்டில் உடனே வந்து விழும் பணம்..!

1

2025-26ஆம் ஆண்டுக்கான அறிவிப்புகளை மானிய கோரிக்கை எண் 12-இன் கீழ் வெளியிட்டார் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன். அதன்படி, கூட்டுறவு நிறுவனங்களின் வாயிலாக ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள், ஏழை எளிய, நடுத்தர மக்கள், சுய உதவிக் குழுக்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பு மக்களின் நம்பிக்கையைப் பெற்று, அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக நாட்டிலேயே பல்வேறு முன்னோடித் திட்டங்களை நூறாண்டுகளுக்கும் மேலாக நமது கூட்டுறவு சங்கங்கள் சிறப்புடன் செயல்படுத்தி வருகின்றன.

மாநிலம் முழுவதும் சீரான பொருளாதார வளர்ச்சி ஏற்பட ஏதுவாக, அனைத்து வகைக் கூட்டுறவுச் சங்கங்களும் நடப்பிலுள்ள பல்வேறு திட்டங்களின் வாயிலாக இந்நிதியாண்டில் ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி ரூபாய் அளவிற்குக் கடன் உதவி வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பயிர்க்கடன் விண்ணப்பித்த அன்றே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவதற்கு தொடர்புடைய தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பித்து, ஒரு வார காலத்திற்குள் அக்கடனைப் பெறும் நடைமுறையே தற்பொழுது இருந்து வருகிறது. இந்த நடைமுறையில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்கும் வகையில் இணையவழியில் பயிர்க்கடனுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறையும், விண்ணப்பித்த அன்றே விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பயிர்க்கடனை நேரடியாக வழங்கும் நடைமுறையும் தருமபுரி மாவட்டத்தில் முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்பட்டு, பின்னர் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

நிலமற்ற ஏழை எளிய பெண் விவசாயத் தொழிலாளர்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு 5 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ள நிலமற்ற ஏழை எளிய பெண் விவசாயத் தொழிலாளர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், அவர்களின் பெயரில் இரண்டு ஏக்கர் வரை விவசாய நிலம் வாங்க ரூ. 5 லட்சம் வரை கடன் கூட்டுறவு வங்கிகள் வாயிலாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் விளைபொருட்களைச் சேமித்துப் பதப்படுத்தவும், மதிப்புக் கூட்டி விற்பனை செய்யவும் ஏதுவாகக் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாகக் கடனுதவி வழங்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like