1. Home
  2. தமிழ்நாடு

அயோத்தி செல்லும் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்...!

1

அயோத்தி ராமர் கோயிலில் தற்போதைக்கு இரண்டு ஷிப்டுகளாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். காலை 7 மணி முதல் 11.30 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும் தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடும் பனி நிலவி வரும் சூழலில் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் ராமரை தரிசிக்க பக்தர்கள் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர்.

காலை 7 மணிக்கு நடை திறக்கப்படும் நிலையில், அதிகாலை 2, 3 மணிக்கு வரிசையில் கூட்டம் நெரிசல் அதிகரித்து விடுகிறது. முதல் நாள் கூட்ட நெரிசலை பார்த்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தே நேரில் வந்து நிலைமையை ஆய்வு செய்தார். சில பக்தர்கள் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

வெளியில் பார்க்கிங் வசதிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் சுற்றுவட்டார போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட போலீசார் மற்றும் மாநில சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர அதிவிரைவு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆகியவையும் ராமர் கோயில் வளாகத்தை சுற்றிலும் குவிக்கப்பட்டுள்ளனர்.

அயோத்தியில் ராமர் கோயிலை நோக்கி வரும் பக்தர்கள் கூட்டம், அப்படியே ஹனுமன் கார்கி கோயிலுக்கு செல்கிறது. இதனால் அங்கேயும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக காலை 6 மணி முதல் இரவு 10 மணி தரிசனம் செய்யலாம் என்று நேர நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அயோத்தி நகரின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாஸ்தி, கோண்டா, அம்பேத்கர் நகர், பாராபங்கி, சுல்தான்பூர், அமேதி ஆகிய நகரங்களில் வரும் நெடுஞ்சாலைகளில் அயோத்தி நகரின் எல்லையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலேயே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.


 

Trending News

Latest News

You May Like