1. Home
  2. தமிழ்நாடு

ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்... தமிழ்நாட்டிலிருந்து பம்பைக்கு சிறப்பு பஸ்...!

1

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழக பக்தர்கள் ஏராளமானோர் செல்வது என்பது வழக்கம். இதனால் தமிழகத்தில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சபரிமலை சீசன் காலத்தில் அதிக அளவில் பஸ்கள் இயக்கப்படுகின்றது.ஆனால் இப்படி இயக்கப்படும் பஸ்கள் அனைத்தும் நிலக்கல் என்ற இடம் வரையே செல்லும். அங்கிருந்து பம்பை வரை 18 கிலோ மீட்டர் தொலைவிற்கு கேரளா அரசு பஸ்களில் செல்ல வேண்டும். அதிகளவு பக்தர்கள் செல்வதால் பஸ்கள் மாரி செல்வதில் சிரமமாக இருப்பதாக பக்தர்களின் தரப்பில் கூறப்பட்டது.இதனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் பம்பை வரை பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

 

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சபரிமலைக்குச் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இரா.மோகன் அறிவித்துள்ளார்.

சபரிமலைக்கு இந்த வருடம் பக்தர்கள் கூடுதலாகப் பயணம் செய்ய முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைக் கருத்தில் கொண்டு சென்னை, திருச்சி உள்ளிட்ட முக்கியமான நகரங்களிலிருந்து கூடுதலாகப் பேருந்துகள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

நவம்பர் 15ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 16ஆம் தேதி வரை சென்னையில் கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களிலிருந்தும், திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி / கடலூர் ஆகிய இடங்களிலிருந்தும் பம்பைக்கு, அதிநவீனச் சொகுசு மிதவைப் பேருந்துகள் (Ultra Deluxe) மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள (NSS) சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்படவுள்ளன.

 

இந்த சிறப்பு பஸ்களுக்கு 60 நாட்களுக்கு முன்னதாக ஆன்லைன் மூலமாக www.tnstc.in மற்றும் TNSTC யின் அதிகாரப்பூர்வ செயலி மூலம் முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே இந்த இணையதளம் மூலமாக தங்களது பஸ்களை புக் செய்து கொள்ளலாம்

Trending News

Latest News

You May Like