மகிழ்ச்சி தரும் செய்தி..! ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்தது ஒருவர் இல்ல இருவர்..!

"ஆமதாபாத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டிய ஏர்இந்தியா AI 171 விமானம், புறப்பட்ட 5 நிமிடங்களுக்குப் பிறகு மதியம் 1:38 மணிக்கு குடியிருப்புப் பகுதியில் (மேகானி நகர்) மோதி விபத்துக்குள்ளானது.இந்த பயங்கரமான துயர சம்பவம் ஒட்டு மொத்த நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்தது.
ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட போயிங் 787-8 விமானத்தில் 11A இருக்கையில் இருந்த நபர் உயிர் பிழைத்தார். அந்த இருக்கையில் இருந்த பயணி பிரிட்டனை சேர்ந்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரமேஷ், "விமானம் புறப்பட்ட 30 விநாடிகளில், ஒரு பெரிய சத்தம் கேட்டது. பின்னர் விமானம் விபத்துக்குள்ளானது. அனைத்தும் மிக விரைவாக நடந்தது என்று அவர் கூறினார்
ரமேஷுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தவல் கமேட்டி, "அவரது உடல் முழுவதும் பல காயங்கள் இருந்தன. ஆனால் அவர் ஆபத்திலிருந்து மீண்டுவிட்டதாகத் தெரிகிறது" என்று கூறினார்.
அவர் தனது போர்டிங் பாஸைப் பகிர்ந்து கொண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன, அதில் அவரது பெயர் மற்றும் இருக்கை எண் காணப்பட்டது.
இந்தியாவில் பிறந்து 2003-ஆம் ஆண்டில் பிரிட்டனில் குடியேறிவிட்ட தொழிலதிபரான விஸ்வாஸ் குமார் ரமேஷூக்கு மனைவியும் நான்கு வயது மகனும் உள்ளனர்.
இந்த நிலையில்தான், 10 நிமிடம் தாமதமாக வந்ததால், விமைன நிலையத்துக்குள் அனுமதி மறுக்கப்பட்டதால், விமானத்தை தவறவிட்டு நூலிழையில் உயிர் தப்பியிருக்கிறார் பூமி சௌகான் என்ற இளம்பெண்.
10 நிமிடம் தாமதமாக வந்ததால், என்னை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். அவரை உள்ளே அனுப்பினால், விமானம் புறப்படத் தாமதமாகும் என்று சொல்லிவிட்டார்கள். அகமதாபாத் சாலைகளில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் என்னால் உரிய நேரத்துக்கு விமான நிலையம் வர முடியாமல் போனது. எவ்வளவோ கெஞ்சியும் பாதுகாவலர்கள் என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. நான் விமான நிலையத்திலேயே செய்வதறியாது நின்றுகொண்டிருந்தேன். ஆனால், விமானம் விபத்துக்குள்ளானதாகக் கேட்டபோது, என்னால் என்ன நடக்கிறது என்றே புரிந்துகொள்ள முடியவில்லை.
ஒரு நிமிடம் ஆடிப்போனேன் என்கிறார் பூமி. அவர் விமான நிலையத்துக்குப்போகும்போது, அவளது குழந்தையை, தனது தாயிடம் விட்டுச் சென்றிருக்கிறார். இது பற்றி அவரது தாயார் கூறுகையில், அவள் குழந்தையால்தான் இன்று அவர் உயிருடன் இருக்கிறார் என்றும், எல்லாம் கடவுளின் செயல் என்றும், தனது மகள் உயிர் பிழைத்ததற்கு கடவுளுக்கு நன்றி கூறுகிறார்கள். ஆனால், நடந்திருப்பது மிகவும் துயரமான சம்பவம் என்றும் கூறியுள்ளார்.
இது பற்றி அவரது தந்தை கூறுகையில், எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தபோதே, விமானம் விபத்துக்குள்ளானதாகக் கூறினார்கள். நாங்கள் அதிர்ந்துவிட்டோம் என்கிறார்.