1. Home
  2. தமிழ்நாடு

ஹேப்பி நியூஸ்..! டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்..!

1

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் பணிபுரியும் (C மற்றும் D) பிரிவு ஊழியர்கள் மற்றும் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் தகுதியுடைய கடைப்பணியாளர்கள் 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணை தொகை தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு வழங்கப்படும்

அதன் அடிப்படையில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் பணிபுரியும் 24816 தகுதியுடைய நபர்களுக்கு ரூ.40,62 கோடி செலவில் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

மேலும் அரசின் இந்த நடவடிக்கை தமிழ்நாடு மாநில வாணிபக் கழக நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மிகவும் ஈடுபாட்டுடனும், ஊக்கத்துடனும் பணியாற்றுவதையும், எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதை உறுதி செய்திட வழிவகை செய்யும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like