நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..!சவரனுக்கு ரூ.280 குறைவு..!

சென்னையில் சில்லரை வர்த்தகத்தில் 22 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு நேற்று ரூ.120 குறைந்து விற்பனையானது. ஒரு சவரன் தங்கம் ரூ. 70, 040 ஆக இருந்தது.
இந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலையில் சரிவு காணப்படுகிறது. ஒரு சவரன் ரூ.280 குறைந்து ரூ.69,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.35 குறைந்து ரூ.8,720 ஆக உள்ளது.
தங்கத்தின் விலையில் தற்போது சரிவு காணப்படுவது பெண்கள் இடையே மகிழ்ச்சி என்ற போதிலும், அட்சய திருதியை வர உள்ளதால் விலையில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறி உள்ளனர்.