1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..! குறைந்தது அரிசி விலை..!

1

2023 ஆம் ஆண்டில் நாட்டில் மக்கள் பயன்படுத்தும் பல அத்தியாவசிய பொருள்களுக்கான விலையும் அதிரடியாக உயர்ந்தது. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இதனை கட்டுப்படுத்துவதற்காக குறிப்பிட்ட பொருட்களின் ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்திருந்தது. கடத்த சில மாதங்களாக அரிசியின் விலையானது கிலோவிற்கு ரூபாய் 10 முதல் 15 வரை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. அந்த வகையில் அரிசி போன்ற பொருள்களுக்கான ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து நெல் வரது அதிகரித்துள்ளது.

கோடை விளைச்சல் சந்தைக்கு வர தொடங்கியுள்ளதால் தற்போது அரிசியின் விலையானது குறைய தொடங்கியுள்ளது.சந்தையில் பாரத் அரிசியும் தற்போது கிடைக்கிறது. மேலும், அரிசி இருப்பு அளவை மத்திய அரசு கண்காணித்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால் அரிசி விலை சற்று குறைந்துள்ளது.

புழுங்கல் அரிசி விலை கிலோவுக்கு 8 ரூபாய் குறைந்தது. கடந்த பிப்ரவரி மாதம் புழுங்கல் அரிசி விலை கிலோவுக்கு ரூ. 58 ஆக இருந்தது. இப்போது 49 ரூபாயாகக் குறைந்துள்ளது. அரிசி விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க அரிசி ஏற்றுமதியிலும் இந்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த வாரத்தில் அரிசி ஏற்றுமதி விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் அரிசி விலை உயர்வு பொதுமக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. அரிசி, பருப்பு, எண்ணெய், பால் போன்ற அத்தியாசியப் பொருட்களின் விலையேற்றத்தால் தவித்தனர். அதோடு காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்திருந்தது. இந்நிலையில் தற்போது அரிசி விலை குறைந்து கட்டுக்குள் வந்திருப்பது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. 

Trending News

Latest News

You May Like