இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..! அதிரடியாக சரிந்த எலுமிச்சை விலை..!

எலுமிச்சையின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.140 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு கிலோ ரூ.35 ரூபாய்க்கு விற்பனை ஆவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்னர்.
தென்காசி மாவட்டம் கடையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கரில் எலுமிச்சை விவசாயம் செய்யப்பட்டு வரும் நிலையில், வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
கடந்த ஆண்டு கிலோ 140 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் தற்போது கிலோ முப்பது முதல் 35 ரூபாய்க்கு விற்பனை ஆவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடையம் பகுதியில், சேமிப்புக் கிடங்கு அமைத்து எலுமிச்சையை மதிப்புக் கூட்டு பொருளாக மாற்றி விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.