1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகள் ஹேப்பி..! கடந்த 4 நாட்களில் பவுனுக்கு 3,280 வரை ரூபாய் குறைந்தது..!

1

கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 24) அன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் போது விதிக்கப்படும் சுங்க வரி 6 சதவீதமாக குறைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.


இதையடுத்து தங்கத்தின் விலை இந்தியாவில் சரிந்து வருகிறது. அதன்படி நேற்று (ஜூலை 25) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 ஆக குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.6,430-க்கு விற்பனையானது. இதனால் பவுனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.51,440-க்கு விற்பனையானது.

சென்னையில் இன்று (ஜூலை 26) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.6.415-க்கு விற்கப்படுகிறது. பவுனுக்கு ரூ.120 குறைந்து ஒரு பவுன் ரூ.51,320-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.89-க்கு விற்பனையாகிறது.

அண்மைய காலமாக தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்து வந்தது. அதனால் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மக்கள் தங்கம் வாங்குவது இயலாத சூழல் இருந்தது. தற்போது தங்கம் விலை குறைந்துள்ளதால் பெண்கள் நகைகளை வாங்க ஆர்வம் காட்டியுள்ளனர்.

ஓரிரு வாரங்களுக்கு விலையில் சற்று ஏற்ற இறக்கம் இருக்கக்கூடும். சர்வதேச அளவில் ஏதேனும் தாக்கம் ஏற்பட்டால் தங்கம் விலை மேலும் குறையும். பவுன் விலை ரூ.50 ஆயிரம் வரை இறங்கவும் வாய்ப்பு உள்ளது. எனினும், ஆடி பதினெட்டுக்கு பிறகு விலை அதிகரிக்கும் என்று நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.

Trending News

Latest News

You May Like