1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..! ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.!

1

தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்தது. கடந்த புதன்கிழமை தங்கம் பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,800-க்கு விற்பனையானது. வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.54,400-க்கு விற்பனையானது. வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.54,720-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், ஒரே நாளில் அதிரடியாக சனிக்கிழமை பவுனுக்கு ரூ.1,520 குறைந்து ரூ.53,200-க்கும், கிராமுக்கு ரூ.190 குறைந்து ரூ.6,650-க்கும் விற்பனையானது. இதேபோல், வெள்ளியின் விலையும் ஒரே நாளில் அதிரடியாக சனிக்கிழமை கிராமுக்கு ரூ.4.50 உயா்ந்து ரூ.96-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ. 4,500 குறைந்து ரூ. 96,000-க்கும் விற்பனையானது.

Trending News

Latest News

You May Like