1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..! தங்கம் சவரனுக்கு 880 ரூபாய் குறைந்தது..!

W

கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கமாக இருந்த தங்கம் விலை, இன்று விலை அதிரடியாக குறைந்து விற்பனையாகி வருகிறது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு எந்த மாற்றமுமின்றி விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 110 ரூபாய் குறைந்து, ரூ.6,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 880 ரூபாய் குறைந்து, ரூ.54,000-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5,619-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 90 ரூபாய் குறைந்து, ரூ.5,529-க்கு விற்பனை செய்யப்படுகிறது

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 1,00,300 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 3,300 ரூபாய் குறைந்து, ரூ.97,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.97.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

.

Trending News

Latest News

You May Like