இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..! தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்தது..!
அமெரிக்காவின் வட்டி விகிதம் குறைக்கப்பட்ட பின்னர் தங்கத்தின் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் 2025ம் ஆண்டில் வட்டி விகித குறைப்பு 2 முறை மட்டுமே இருக்கும் என அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வட்டி விகிதம் பெரிய அளவில் குறைய வாய்ப்பில்லை என்ற சூழல் உருவாகி உள்ளது. எனவே இனி வரும் நாட்களிலும் இந்த போக்கு தொடர வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் டிசம்பர் 19ம் தேதியான இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்திருப்பது பலருக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது.
22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ. 7,070 என்ற நிலையில் விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 வீழ்ச்சி அடைந்து ரூ.56,560 என்ற நிலையில் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை சரிந்துள்ள வெள்ளியின் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.99 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,000 குறைந்து ரூ.99,000 என்ற நிலையில் விற்பனை செய்யப்படுகிறது.