1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..! தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது..!

1

தங்கத்தின் விலை தினசரி ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் மீண்டும் 45 ஆயிரத்தைக் கடந்து விடுமோ என நகைப்பிரியர்கள் வேதனையடைந்தனர். நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.44,640-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.44,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.30 குறைந்து ரூ.5,550-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்து ரூ.48,440-க்கும் ஒரு கிராம் ரூ.32 குறைந்து ரூ.6,055-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை குறைந்து வரும் வேளையில் வெள்ளியும் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,000 குறைந்து ரூ.79,500-க்கும் ஒரு கிராம் ரூ.2 குறைந்து ரூ.79.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Trending News

Latest News

You May Like