1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..! தடாலடியாக சரிந்த தங்கம் விலை..!

Q

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 510-க்கும், ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்து 80-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 560-க்கும், ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் மீண்டும் தங்கம் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,400-க்கும் சவரனுக்கு ரூ.1,280 குறைந்து சவரன் ரூ.67,200-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.108-க்கும், கிலோவுக்கு நான்காயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
03-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,480
02-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,080
01-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,080
31-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.67,600
30-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,880

Trending News

Latest News

You May Like

News Hub