1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகள் ஹேப்பி..! 2 நாட்களில் 600 ரூபாய் குறைந்த தங்கம் விலை..!

1

பண்டிகை காலத்தில் தங்கம் விலை கடும் சரிவைக் கண்டது நகை பிரியர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலை ஏற்றம் காணுமா? அல்லது மீண்டும் குறையுமா என பலரும் எதிர்பார்த்து வந்தனர்.

நேற்று தங்கம் விலை கடுமையான சரிவைக் கண்டது. தங்கம் சவரனுக்கு ஒரே நாளில் ரூபாய் 560 குறைந்து 56,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூபாய் 70 குறைந்து, 7,030 க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை இகிராமுக்கு ரூ.5 குறைந்து உள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் இன்று ரூ.7,025க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.40 குறைந்து ரூ.56,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூபாய் 560 குறைந்த நிலையில் இன்று மேலும் 40 ரூபாய் குறைந்துள்ளது. 2 நாட்களில் மொத்தமாக 600 ரூபாய் குறைந்துள்ளது.

Trending News

Latest News

You May Like