இல்லத்தரசிகள் ஹேப்பி..! தங்கம் வெள்ளி விலை மேலும் குறைந்தது..!
சென்னையில் இன்று (ஜூலை 25) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 6,430 ஆக உள்ளது. அதேபோல 8 கிராம் ஆபரணத் தங்கம் 51,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று சவரனுக்கு 480 ரூபாய் குறைந்துள்ளது.கடந்த 3 நாட்களில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,040 குறைந்துள்ளது.
முன்னதாக, நேற்றைய தினம் (புதன்கிழமை) கிராமுக்கு ரூ.60 மற்றும் செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ. 275 என தங்கம் விலை குறைந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் வெள்ளி விலையில் தொடர்ந்து சரிந்து வருகிறது. சென்னையில் இன்றும் வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து , சில்லறை விற்பனையில் ஒரு கிராம் ரூ.89க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 89,000க்கு விற்கப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து சரிந்து வருவது நடுத்தர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.