1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..! ஒரே நாளில் 1000 + 1000 வரப்போகிறது..!

1

பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து பொங்கல் பரிசுத் தொகுப்பு முறையாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க குழுவும், புகார் எண்களும் அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த நிலையில் நாளை முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாள், நேரத்தில் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1,000 பரிசுத்தொகையை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நாளை முதல் டோக்கன் வழங்கப்பட உள்ள நிலையில், ஜனவரி 10ம் தேதி முதல் ரூ.1,000 ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி 10 முதல் 13ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பினை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஜனவரி 13ம் தேதிக்குள் பொங்கல் தொகுப்பினை பெற முடியாதவர்கள், ஜனவரி 14ம் தேதி பெற்று கொள்ளலாம் எனவும் தமிழக அரசு கூறியுள்ளது.

ஜன.10 முதல் பொங்கல் பணம் ரூ.1000. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படுகிறது. மேலும், அதே தேதியில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரமும் வழங்கப்படுகிறது. இதனால், ஒரே நாளில் ₹1000 வங்கிக் கணக்கிலும், ரேஷன் கடைகள் மூலம் ₹1000 ரொக்கமாகவும் கிடைக்கும்.
 

Trending News

Latest News

You May Like