1. Home
  2. தமிழ்நாடு

வடகிழக்குப் பருவமழை இன்று முதல் தொடங்கியது! பொதுமக்கள் உற்சாகம்!

வடகிழக்குப் பருவமழை இன்று முதல் தொடங்கியது! பொதுமக்கள் உற்சாகம்!


தமிழகம் மற்றும் கேரளாவில் வடகிழக்குப் பருவமழை இன்று முதல் தொடங்கி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், தற்போது பசிபிக் கடல் பகுதியில் அதிகரித்துள்ள பருவநிலை மாற்றத்தால் ஒரு வார காலம் வட கிழக்கு பருவமழை கடுமையாக பெய்யும். தென் மாவட்டங்களில் நவம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்து மழை பெய்யும்.

வடகிழக்குப் பருவமழை இன்று முதல் தொடங்கியது! பொதுமக்கள் உற்சாகம்!

நாளை மத்திய கிழக்கு வங்கக் கடலை ஒட்டிய வடக்கு அந்தமான் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மேலும் வலுப்பெற்று ஒரு வாரம் மழை பெய்யும்.

குறிப்பாக, தமிழகத்தில் இன்று முதல் மழை பெய்யத் தொடங்கும். அதே நேரத்தில் கடலோரப் பகுதியில் காற்று அதிகரிக்கும். காலை மற்றும் மாலை நேரங்களில் தமிழகத்தின் உள்பகுதியில் மழை பெய்யும்.

மேலும், புதுச்சேரி, ஆந்திர கடலோரப் பகுதி, தெலங்கானா, ராயலசீமா, தெற்கு கர்நாடகா மற்றும் கேரளாவிலும் இன்று முதல் மழை பெய்யும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட கிழக்கு பருவ மழையின் துவக்கத்தையொட்டி தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று காலை முதலே லேசான மழை பெய்தது.

Trending News

Latest News

You May Like