1. Home
  2. தமிழ்நாடு

ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள்!!

1

இயேசுவின் உயிர்ப்பு, இறப்பிற்குப் பிறகு வாழ்வு உண்டு என்கிற செய்தியைத் தருகின்ற ஒரு நிகழ்வு மட்டுமல்ல ஈஸ்டர். மாறாக, இப்படிப்பட்ட வாழ்வின் தன்மை என்ன என்பதை சுட்டிக் காட்டக்கூடிய ஒன்று! 'இயேசுவின் உயிர்ப்பு' வாழ்வின் முழுமையை சுட்டி நிற்கிறது. எனவே உயிர்ப்பை அதாவது வாழ்வின் முழுமையை அனுபவிக்க விரும்பும் எந்த நபரும் இயேசுவை போல் தன்னையே துன்பத்தின் மூலம் வெறுமையாக்க முன் வர வேண்டும்.

தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் வெறுமையாக்காமல் ஒரு மனிதனால் வாழ்வின் முழுமையை அனுபவிக்கமுடியாது. உலகில் பிறந்த எவரும் மரிப்பது கட்டாயமான ஒன்று. ஆனால், இயேசு கிறிஸ்து மட்டும் பிறந்து இறந்து உயிர்த்து எழுந்தார் என்ற நிகழ்ச்சி ஒரு சாதனை நிகழ்வாகும். அமெரிக்காவில் ஈஸ்டர் விழா அரசு விழாவாக நடத்தப்படுகிறது. அன்று நன்றாக வேக வைக்கப்பட்ட முட்டையை சர்க்கரைப்பாகு ஊற்றி பதப்படுத்தி வண்ணம் பூசி அழகுபடுத்துகின்றனர்.... அதை கூடைகளில் வைத்து குழந்தைகளுக்குக் கொடுக்கின்றனர். பெரும்பாலும் இதில் சிவப்பு வண்ணம் தடவுவது வழக்கம். நமக்காக ரத்தம் சிந்திய இயேசுவை நினைவு கூரும் வகையில் இந்த வண்ணம் தடவப்படுகிறது. 

அனைவருக்கும் ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள் !

Trending News

Latest News

You May Like