1. Home
  2. தமிழ்நாடு

குடிமகன்கள் ஹேப்பி..! ஆந்திராவில் மதுபான விலை குறைகிறது!

Q

பல மாநிலங்களில் ஆண்டுதோறும் மதுபான விலையைக் கணிசமாக உயர்த்தி வரும் நிலையில் ஆந்திராவில் மதுபானங்கள் விலை படிப்படியாகக் குறைக்கப்படுவது மது பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்தபிறகு மதுபான விலையைக் குறைத்து மதுபாட்டில்கள் மீதான வரியை ரத்து செய்தார். இதனால் மதுபானம் தயாரிக்கும் நிறுவனங்கள் ஏற்கனவே 10 பிராண்டுகளின் விலையைக் குறைத்தது. ரூ.99-க்கு மது கிடைக்கிறது.

கடந்த 2 மாதங்களில் 16 நிறுவனங்கள் தங்களது மதுபானங்களின் விலையைக் குறைக்க அரசிடம் விண்ணப்பித்து உள்ளன.
மதுபான விலையைக் குறைக்கப்பட்ட 10 நிறுவனங்களின் மதுபானங்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது.
இதனால் மதுபான நிறுவனங்களின் இடையே வியாபாரப் போட்டி அதிகரித்து வருகிறது. விலையைக் குறைக்க நிறுவனங்கள் போட்டி போட்டு வரிந்து கட்டிக்கொண்டு வருகின்றன.
இதுகுறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. மேலும் மதுபான விலை குறைக்கப்பட்டதற்கான லேபில்கள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தங்களது நிறுவனங்களின் மதுபாட்டில் விலையைக் குறைக்க நிறுவனங்கள் போட்டி போட்டு அரசிடம் மனு செய்வது இந்தியாவில் இதுவே முதல் முறையென அதிகாரிகள் தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like