மனைவிக்கு பிறந்தநாள்... 14 கடைகளின் வாடகையை வேண்டாம் என சொல்லிய ஓனர்!

மனைவிக்கு பிறந்தநாள்... 14 கடைகளின் வாடகையை வேண்டாம் என சொல்லிய ஓனர்!

மனைவிக்கு பிறந்தநாள்... 14 கடைகளின் வாடகையை வேண்டாம் என சொல்லிய ஓனர்!
X

தன் மனைவியின் பிறந்த நாளை முன்னிட்டு வருவாய் பாதிக்கப்பட்ட கடைக்காரர்களுக்கு ஒரு மாத வாடகையை வணிக கட்டட உரிமையாளர் தள்ளுபடி செய்த சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையை அடுத்த மாதவரம் நேரு தெருவைச் சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு மாதவரம் மண்டல அலுவலகம் எதிரே 14 கடைகள் உள்ளன. அவற்றில் கடை வைத்திருப்போர் ஊரடங்கு காரணமாக, வருவாய் இன்றி பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், கட்டட உரிமையாளர் ஏழுமலை, தன் மனைவி பரமேஸ்வரியின், 49வது பிறந்த நாளையொட்டி, கடைக்காரர்களுக்கு உதவும் நோக்கில், அவர்களுக்கான, ஒரு மாத வாடகையை தள்ளுபடி செய்துள்ளார். கடைகளுக்கு ஒரு மாத மொத்த வாடகை தொகை 99 ஆயிரத்து, 150 ரூபாய். கொரோனா காலத்தில் தெரிந்தவர்களுக்கு உதவும் நோக்கத்தில் வாடகை வேண்டாம் என கூறிவிட்டதாக ஏழுமலை தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it