1. Home
  2. தமிழ்நாடு

இன்று கேப்டன் விஜயகாந்துக்கு பிறந்தநாள் - தலைவர்கள் வாழ்த்து..!

1

இன்று தேமுதிக தலைவரும்,  நடிகருமான விஜயகாந்தின் 71 வது பிறந்த நாள் கொண்டாடி வருகிறார். விஜயகாந்தின் பிறந்த நாளை ஒட்டி கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதுடன், தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்படுகின்றன. தேமுதிக தொண்டர்களால் வறுமை ஒழிப்பு தினமாக விஜயகாந்தின் பிறந்தநாள் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில்  முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் , தே.மு.தி.க நிறுவனத் தலைவரும், எனது தோழருமான திரு. விஜயகாந்த் அவர்களுக்கு உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.முழு உடல்நலத்துடன் புத்துணர்ச்சியையும் பெற்றுப் பல்லாண்டு நீங்கள் மகிழ்ச்சியோடும் நிறைவோடும் வாழ விழைகிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜயகாந்த் பிறந்தநாள் ஒட்டி பல அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 

இந்நிலையில்  முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் , தே.மு.தி.க நிறுவனத் தலைவரும், எனது தோழருமான திரு. விஜயகாந்த் அவர்களுக்கு உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.முழு உடல்நலத்துடன் புத்துணர்ச்சியையும் பெற்றுப் பல்லாண்டு நீங்கள் மகிழ்ச்சியோடும் நிறைவோடும் வாழ விழைகிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.

சசிகலா தனது ட்விட்டர் பக்கத்தில் , தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவரும், தமிழக சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான அன்பு சகோதரர் திரு. விஜயகாந்த் அவர்கள், தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடும் இவ்வேளையில், எனது இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

அம்மா மக்கள்  முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று 71வது பிறந்தநாள் காணும் தே.மு.தி.க. நிறுவன தலைவர் அன்பு நண்பர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் மக்கள் பணியாற்றிட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், எளிய மக்கள் மீது பேரன்பு கொண்ட பண்பாளருமான கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களுக்கு, @BJP4Tamilnadu  சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  கேப்டன் திரு.  விஜயகாந்த் அவர்கள், நீண்ட ஆயுளுடன், நிறைந்த நலன்களுடன் மக்கள் பணி தொடர வேண்டுமென்று இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார். 

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று பிறந்தநாள் விழா காணும் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவர் அன்புச் சகோதரர் திரு. விஜயகாந்த்  அவர்களுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.  

Trending News

Latest News

You May Like