1. Home
  2. தமிழ்நாடு

ரயில் பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு..! சிறப்பு ரயில்கள் அறிவிப்பு..!

1

சனி மற்றும் ஞாயிறு விடுமுறையையொட்டி சிறப்பு ரயிலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை எழும்பூரில் (ரயில் எண் 06089/06090) இருந்து திருநெல்வேலிக்கும், திருநெல்வேலி இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை எழும்பூரில் இருந்து வருகின்ற 21ஆம் தேதி இரவு 9:55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது அடுத்த நாள் காலை 8 45 மணிக்கு நெல்லையை சென்று சேருகிறது.

இதே போல மறுமார்கத்தில் திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயிலானது இயக்கப்படுகிறது. (ரயில் எண் 06089/06090) இந்த சிறப்பு ரயில் 22 ஆம் தேதி இரவு 9.40 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படுகிறது. அடுத்த நாள் காலை 8. 15 மணியளவில் சென்னை வந்தடைகிறது. இந்த சிறப்பு ரயிலில் இரண்டாம் வகுப்பு ஏசி இரண்டு பெட்டிகளும், மூன்றாம் வகுப்பு ஏசி இரண்டு பெட்டிகளும், 14 முன்பதிவு செய்த பெட்டிகளும், இரண்டு லக்கேஜ் பெட்டியும் இணைக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like