அனுமன் ஜெயந்தி : 1 லட்சத்து 8 வடைகள் கொண்டு மாலை அணிவிப்பு!!
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவிலில் சுவாமிக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலைகள் சார்த்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மார்கழி மாதம் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் கொண்ட நன்னாளில் ஆஞ்சநேயர் அவதரித்தார். அதன்படி, இன்று நாமக்கல்லில் உள்ள, பிரசித்தி பெற்ற அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அதிகாலை கோவிலின் நடை திறக்கப்பட்டு, காலை 5 மணிக்கு 19 அடி உயர ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைகளால் தொடுக்கப்பட்ட மாலைகள் சார்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இவ்விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் பாராளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
கொரோனா கட்டுபாடுகளோடு ஆஞ்சநேயரை தரிசிக்க இணைய வழியில் பதிவு செய்த 300 பேர், இலவச தரிசன முறையில் 200 பேர் என ஒருமணி நேரத்திற்கு 500 பேர் அனுமதிக்கப்படுகின்றனர்.
newstm.in