1. Home
  2. தமிழ்நாடு

அரண்மனை 2 படத்திற்கு பிறகு மீண்டும் பேயாக நடிக்கும் ஹன்சிகா..!

1

எங்கேயும் காதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஹன்சிகா மோத்வானி, அடுத்தடுத்து மாப்பிள்ளை, வேலாயுதம், வாலு, சிங்கம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜய், தனுஷ், ஆர்யா, சிம்பு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் அவர் ஜோடி சேர்ந்துள்ளார். இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு அவர் தனது நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதைத்தொடர்ந்து, அண்மையில் அவரது நடிப்பில் பார்ட்னர் என்ற திரைப்படம் வெளியானது. அதில், ஆதிக்கு ஜோடியாக அவர் நடித்திருப்பார். மேலும், சாந்தனு மற்றும் முகின் ராவுடன் இணைந்து இணைய தொடரிலும் அவர் நடித்திருந்தார். திருமணத்திற்கு பிறகு அவர் நடிப்பு மற்றும் தொழில்களிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். தற்போது, இயக்குநர்கள் சபரி மற்றும் குரு சரவணன் இயக்கத்தில் ஹன்சிகா நடித்துள்ள படம் கார்டியன். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு அடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இப்படத்தின் முன்னோட்டம் இன்று வெளியானது. நடிகர் விஜய் சேதுபதி முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளார். சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை 2 படத்தில் பேயாக ஹன்சிகா நடித்திருப்பார். இதை தொடர்ந்து கார்டியன் படத்திலும் பேயாக நடித்து மிரட்டியிருக்கிறார். இந்த டீசர் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

Trending News

Latest News

You May Like