1. Home
  2. தமிழ்நாடு

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார்..!

Q

கடந்த ஆண்டு அக்., 7 ல் மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஓராண்டுக்கு மேல் நடந்த இந்த போரில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த யாஹ்யா சின்வர் உட்பட பல முக்கியமான தலைவர்கள் கொல்லப்பட்டனர். இவருக்கு பிறகு அவரது சகோதரர் முகமது சின்வர் ஹமாஸ் அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருவதாக தகவல் வெளியானது.

அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளின் முயற்சியால் போர் நிறுத்தம் அமலானது. ஆனால், அதில் ஒப்பந்தப்படி விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக்கூறி, மீண்டும் இஸ்ரேல் தாக்குதலை துவக்கி உள்ளது.

இந்த முறை அந்த அமைப்பின் முக்கிய தலைவர்கள் இலக்கு வைத்து கொல்லப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர், காசாவின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் முகமது சின்வர் கொல்லப்பட்டு இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், நீண்டநாட்களாக தேடப்பட்டு வந்த ஹமாஸ் அமைப்பின் முகமது சின்வர்,இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டார் என தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like