இன்று முதல் ஹால் டிக்கெட்! மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000..!

அரசுப் பள்ளிகளில் மாநிலப் பாடத் திட்டத்தின்கீழ் 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். இத்தேர்வில் 1,000 மாணாக்கர்கள் (500 மாணவர்கள் 500 மாணவியர்கள்) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு ரூ.10,000 (மாதம் ரூ.1,000 வீதம் ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும்) இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.
நடப்பாண்டு முதல்வர் திறனாய்வு தேர்வு அக்டோபர் 7-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார்.
அதில், “அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் திறனை கண்டறிவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், 2023-24ஆம் கல்வியாண்டு முதல் முதல்வர் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. முதல்வர் திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெறும் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகளுக்கு என மொத்தம் 1000 பேருக்கு இளங்கலை பட்டப்படிப்பு வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.
நடப்பாண்டு முதல்வர் திறனாய்வு தேர்வு அக்டோபர் 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று பிற்பகல் இணையதளத்தில் வெளியிடப்படும். மாணவர்கள் dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தங்களது ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பயனர் பெயர், கடவுச்சொல் ஆகியவற்றை டைப் செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். ஹால் டிக்கெட்டில் பெயர், தேதி, புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.