1. Home
  2. தமிழ்நாடு

அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரி..!

1

உ.பி மீரட் பகுதியைச் சேர்ந்தவர் அக்ஷய் ஜெயின். இவர், அதே பகுதியில் இரும்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், அவரது நிறுவனத்தில் ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து, அவரது நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்த சென்றனர். அப்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனத்தின் எடையை சோதனையிட்டனர்.
 

வாகனத்தில் உள்ள இரும்பின் எடை, அக்ஷய் ஜெயின் குறிப்பிட்ட எடையை விட அதிகமாக இருந்ததால், 10,532 ரூபாய் அபராதம் விதித்ததுடன், சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
 

இதைத்தொடர்ந்து, காஜியாபாதில் உள்ள ஜி.எஸ்.டி., அலுவலகத்திற்கு சென்ற அக்ஷய் ஜெயின், தன்னிடம் பணம் பறிக்கவே இதுபோன்ற செயல்களில் அதிகாரிகள் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டியதுடன், தான் அணிந்திருந்த உடையை கிழித்து அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார்.

Trending News

Latest News

You May Like