பிரியாணி வாங்கினால் அரை கிலோ தக்காளி இலவசம்.. தக்காளி கொடுத்தால் பிரியாணி இலவசம்.. அடடே !

பிரியாணி வாங்கினால் அரை கிலோ தக்காளி இலவசம்.. தக்காளி கொடுத்தால் பிரியாணி இலவசம்.. அடடே !

பிரியாணி வாங்கினால் அரை கிலோ தக்காளி இலவசம்.. தக்காளி கொடுத்தால் பிரியாணி இலவசம்.. அடடே !
X

இரண்டு பிரியாணி வாங்கினால் அரை கிலோ தக்காளி இலவசம், ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் ஒரு பிரியாணி இலவசம் என சலுகை அறிவித்து மக்களை மகிழ்ச்சியில் தள்ளியது ஒருபிரியாணி கடை.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சோத்துப்பாக்கத்தில் ஆம்பூர் பிரியாணி இயங்கி வருகிறது. இக்கடை இன்று அதிரடி ஆஃபர் அறிவித்து விற்பனை செய்தது. அதாவது, முழு பிரியாணி இரண்டு வாங்கினால் அரை கிலோ தக்காளி இலவசம் என்றும், அதேபோல் ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் ஒரு பிரியாணி இலவசம் என்றும் சலுகையை அறிவித்து விற்பனை செய்யப்படுகிறது.
biriyani


இயற்கை சீற்றத்தால் அழிந்து வரும் விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆஃபர் வழங்கப்படுவதாக கடை உரிமையாளர் கூறுகிறார். ஆனால் இப்போது தக்காளி விலை, பெட்ரோல், டீசல் விலையைவிட நாளுக்கு நாள் விலை உயர்கிறது. இதை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனையும் சுட்டிக்காட்டி தக்காளிக்கு பிரியாணி வழங்கியதாக அவர் கூறினார்.

biriyani

மேலும், தக்காளி விலை உயர்வை குறைக்க வேண்டுமென்றால் மக்கள் அனைவரும் வீட்டு மாடியில் தோட்ட பயிர் செய்வதன் மூலம் இந்த விலை உயர்வை குறைக்க முடியும் என கடை உரிமையாளர் நல்ல யோசனையை தெரிவித்தார்.

newstm.in

Next Story
Share it