1. Home
  2. தமிழ்நாடு

ஹத்ராஸ் இளம்பெண் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார்.. பாஜக தலைவரின் பேச்சால் மக்கள் ஆத்திரம் !

ஹத்ராஸ் இளம்பெண் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார்.. பாஜக தலைவரின் பேச்சால் மக்கள் ஆத்திரம் !


ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த இளம்பெண் குற்றம்சாட்டப்பட்ட நபர்களில் ஒருவனுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார், பாலியல் பலாத்காரம் செய்ததை நேரில் பார்த்த சாட்சி உள்ளதா என பேசியது அப்பகுதி மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி விவசாய தோட்டத்திற்கு சென்ற 19 வயது இளம்பெண் 4 பேர் கொண்ட கும்லால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும் அப்பெண்ணின் முதுகு எலும்பு, கழுத்து எழும்பு உடைக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்த கொடூரமான சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இக்கொடூரத்தில் ஈடுபட்ட சந்தீப் சிங், ராமு சிங், ரவி சிங் மற்றும் லவ்குஷ் சிங் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஹத்ராஸ் இளம்பெண் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார்.. பாஜக தலைவரின் பேச்சால் மக்கள் ஆத்திரம் !

இதற்கிடையில், இந்த வன்கொடுமை சம்பவத்தில் சில நாட்களாக பாஜகவை சேர்ந்த தலைவர்கள் சிலர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் கொடூரத்தில் ஈடுபட்ட உயர்வகுப்பைச் சேர்ந்த 4 பேரையும் காப்பாற்ற சாதி மற்றும் அரசியல் புகுந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அண்மையில் பேசிய உத்தரபிரதேச மாநிலம் பல்யா தொகுதி பாஜக எம்.எல்.ஏ. சுரேந்திர சிங், அரசாங்கம் தனது கைகளில் வாளை ஏந்தி நின்றாலும் பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச்செயல்களை தடுக்க முடியாது என்றார்.

அவரை தொடர்ந்து தற்போது மற்றொமொரு பாஜக தலைவர் ஹத்ரஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார். பாரபங்கி மாவட்டத்தை சேர்ந்த பாஜக தலைவர் ரஞ்சித் பகதூர் ஸ்ரீவட்ஸ்தவா என்பவர் மீது இதுவரை 44 கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டு நிலுவையில் உள்ளன. ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான இளம்பெண் குற்றம்சாட்டப்பட்ட நபர்களில் ஒருவனுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக ரஞ்சித் பகதூர் ஸ்ரீவட்ஸ்தவா சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

குற்றம்சாட்டப்பட்ட ஆண் நபரில் ஒருவருடன் இளம்பெண் கள்ளத்தொடர்பில் இருந்த விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்து அவர்களை அந்த இளம்பெண்ணை கொன்றிருக்கலாம். இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது என்பதை உறுதிபடுத்த நேரில் பார்த்தவர்கள் யாரும் இல்லை. மேலும், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை குற்றம்சாட்டப்பட்ட இளைஞர்கள் கடத்தி சென்றதற்கான நேரடி ஆதாரங்களும் இல்லை.

ஹத்ராஸ் இளம்பெண் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார்.. பாஜக தலைவரின் பேச்சால் மக்கள் ஆத்திரம் !

குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் அப்பாவிகள் என நான் உறுதியாக கூறுகிறேன். அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் விடுதலை செய்யப்படவில்லை என்றால் தொடர்ச்சியாக அவர்கள் மன ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகிவிடுவார்கள்.

இந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் வரை குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்களையும் சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இது அப்பகுதி மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எதிர்க்கட்சிகள் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like